loader
லஞ்சம் மற்றும் ஊழலில்லா இந்தியாவை உருவாக்கும் பணியில்

ஆம் ஆத்மி கட்சியின் சட்ட விதிகள்

1).கட்சிக்கு அவப்பெயர், அவதூறு ஏற்படும் வகையில் இழி குணமுடைய குற்றச்செயலில் உறுப்பினர்கள் எவரும் எந்த சூழலிலும் ஈடுபடக்கூடாது.
2).கட்சியின் குறிக்கோளுக்கு, சட்ட விதிகளுக்கு, அதிகாரப்பூர்வ கொள்கை கோட்பாடுகளுக்கு எதிரான அல்லது மீறியதான எந்த ஒரு செயலிலும் உறுப்பினர் தன்னை ஈடுபடுதிக்கொள்ளக்கூடாது.
3)கட்சி விதிகளை மீறி, கட்சி வலிகாட்டல்களுக்கு பணியாது இருக்கும் கட்டுப்பாடின்மை உறுப்பினர்களுக்கு இருக்கக்கூடாது.

பொறுப்பாளர், நிவாகிகளுக்கான ஒழுக்க விதிமுறைகள்:

1.லஞ்சம், ஊழல் செயல்களை ஊக்குவிக்கவோ, அதில் ஈடுபடவோ கூடாது.
2.நீதிமன்ற குற்றவியல் வழக்குகள் இருக்கக்கூடாது.
3.இனம், ஜாதி, மதம் தீண்டாமையை வளர்த்தல் போன்ற பிரிவினைவாத நல்லிணக்கத்திற்கு எதிரான விஷயங்களை பரப்பும் எந்த ஒரு அமைப்பிலும் ஈடுபாடு கூடாது.
4.பெண்கள் மீது வன்முறையை தொடுப்பதும், பெண்களுக்கு எதிரான குற்றத்செயல்களில் ஈடுபடுதலும் கூடாது.
5.மது நோயாளியாகவோ, மது பழக்கத்தால் பிறருக்கு தொந்தரவு கொடுப்பவராகவோ இருக்கக்கூடாது.
6.தன் சொத்து விபரம் வருட வருமானம், குடும்பத்தின் சொத்து விவரங்களை மறைவின்றி கட்சிக்கு சமர்பிக்க வேண்டும்.

சிறப்பு செய்திகள் 24/7