loader
லஞ்சம் மற்றும் ஊழலில்லா இந்தியாவை உருவாக்கும் பணியில்
ஆம் ஆத்மி கட்சியின் ஊழலுக்கு எதிரான யுத்தம்

வரலாறு

ஆம் ஆத்மி கட்சி என்பது ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட அரசியல் கட்சியாகும்[1 26 நவம்பர் 2012ல் தில்லியில் தொடங்கப்பட்டது.
சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் (பிறப்பு:16 ஆகஸ்ட் 1968) 8ஆம் தில்லி முதல்வர் ஆவார்.
இவர் அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வல சமூக சேவகரும் ஆவார். தகவல் பெறும் உரிமை சட்டமாக்கலுக்கான இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும் வறியவர்களும் அரசின் ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையில் அரசைப் பொறுப்பேற்க வைத்ததற்காகவும் மலரும் தலைமைப்பண்புக்காக 2006ஆம் ஆண்டுக்கான ரமன் மகசேசே பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது..
ஜன் லோக்பால் மசோதாவைக் கோரி 2011-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் இயக்கத்தை அரசியலாக்க வேண்டும் என்ற சிந்தனையில் இந்த கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கினார்.
இந்தக் கட்சி உருவாகியது முதல், ஊழலுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது. டெல்லியில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தின் விலை ஏற்றத்திற்கு காரணம் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கழகங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தியது.
கற்பழிப்பிற்கு எதிரான கடுமையான சட்டத்தை அறிமுகப்படுத்தக் கோரி, கற்பழிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது.
2013 தில்லி சட்ட பேரவை தேர்தலில் அறிமுகமான இந்தக் கட்சி தில்லியில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
2013 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் படி இக்கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 28 இடங்களை வென்றது.
மீண்டும் 2015 ஆம் ஆண்டு 70-க்கு 67 இடங்களை பெற்று இந்தியாவிலேயே மிகப் பெரிய சாதனை படைத்தது

சிறப்பு செய்திகள் 24/7